நாகலாபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாகலாபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-02-05 18:45 GMT

கயத்தாறு:

பனிக்கர்குளம் பஞ்சாயத்து நாகலாபுரத்தில் சந்தனமாரியம்மன், சின்னமாரியம்மன், துர்கையம்மன் கோவில் கட்டப்பட்டது. இக் கோவிலில் சாமி, தேவதைகள் சிலைகள் நிறுவப்பட்டன. அன்று முதல் தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து கும்ப கலசம் மற்றும் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ெசய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்