கும்பாபிஷேக விழாவில் நாகலாநது கவர்னர் பங்கேற்பு
கும்பாபிஷேக விழாவில் நாகலாநது கவர்னர் பங்கேற்றார்.
துவாக்குடி அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சி தேனீர் பட்டி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறக்கட்டளை சார்பில் காரிய சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையொட்டி இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது. இதையொட்டி நேற்று யாகசாலை பூைஜ தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக 27-வது தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் ஆகியோர்கலந்து கொண்டனர்.