நாகை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
நாகை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வெளிப்பாளையம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நாகை வடக்கு இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை நகர்புற துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நம்பியார் நகர், தெத்தி, நாகூர், ஆகிய பகுதிகளில் நாளை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.