நாகை போலீஸ்காரர்பணியிடை நீக்கம்

மதுபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட நாகை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-07-17 19:30 GMT

மதுபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட நாகை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுபோதையில் தகராறு

நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் கோடீஸ்வரன்(வயது 33). சம்பவத்தன்று இவர் நாகை புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு மதுபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்க்கு புகார் வந்தது. புகாரின் பேரில் அவர் விசாரணை மேற்கொண்டதில், கோடீஸ்வரன் மது போதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக ஏட்டு கோடீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கோடீஸ்வரன் கடந்த 2016-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்