நாகை புதிய கடற்கரை, நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் தூய்மை பணி

தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு நாகை புதிய கடற்கரை, நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் தூய்மை பணி நகராட்சி சார்பில் நடந்தது

Update: 2023-09-17 18:45 GMT


தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாகை நகராட்சி சார்பில் நாகை புதிய கடற்கரை, நாகூர் சில்லடி தர்கா கடற்கரை ஆகியவை தூய்மை செய்யப்பட்டது. நாகை புதிய கடற்கரையில் தூய்மை பணியை கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் தொடங்கி வைத்தார். நாகை நகராட்சி ஆணையர் திருமால்செல்வம் முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து பொது இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து உறுதிமொழியை எடுத்து கொண்டனர். தொடர்ந்து கடற்கரையில் கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கடல் நீரில் குப்பைகளை கொட்டுவதால் கடல் வளம் அழியும். எனவே குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்