நாகை அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம்

பருவ தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து நாகை அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-16 18:45 GMT

பருவ தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து நாகை அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபோராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க நாகை மாவட்ட செயலாளர் சிவசக்தி தலைமை தாங்கினார். ரூ.75 ஆக இருந்த பருவ தேர்வு கட்டணத்தை, ரூ.125 உயர்த்தியதை கண்டித்தும், கல்வி ஊக்கத் தொகையை குறைத்ததை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாணவ-மாணவிகள் பங்கேற்பு

இதை தொடர்ந்து பருவ தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும். கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு தபால் மூலம் கடிதம் எழுதினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்