நாகை மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளதால் நாகை மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.