டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மரியாதை
ஆலங்குளத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தொகுதி தலைவர் ராமலிங்கம் தலைமையில் இணைச் செயலாளர் செல்வகுமார், ஆலங்குளம் பேரூர் தலைவர் சுரேஷ் சொக்கலிங்கம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பூலாங்குளம் அய்யாதுரை மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.