வீட்டில் இருந்து மாயமான தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தென்னிலை அருகே வீட்டில் இருந்து மாயமான தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-13 18:43 GMT

தற்கொலை

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கரைமேடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 60). கூலி தொழிலாளி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை வடிவேலின் மனைவி எழுந்து பார்த்தபோது வடிவேல் வீட்டில் இல்லை.

இதையடுத்து அக்கம், பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. தனது கணவர் மாயமானது குறித்து வடிவேலின் மனைவி பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் வந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் வடிவேலின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தூக்கில் பிணமாக கிடப்பது வடிவேல் என்பது தெரியவந்தது.

விசாரணை

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்த புகாரின்பேரில், தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்