விழுப்புரத்தில்வீடுகளின் சுவர்களில் மர்ம குறியீடுகள்கொள்ளை பீதியில் உறைந்த மக்கள்

விழுப்புரத்தில் வீடுகளின் சுவர்களில் மர்ம குறியீடுகளால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனா்.

Update: 2023-04-25 18:45 GMT


விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில வீடுகளின் சுவர்களில் மர்ம குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. இதுபற்றி அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது அதனை வரைந்தது யார் என்ற விவரம் தெரியவில்லை. மர்ம குறியீடுகள் வரையப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வீடுகளில் இரவு நேரங்களில் கொள்ளையர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருக்கலாம் என்றும், அதற்காக இக்குறியீடுகளை வரைந்திருக்கலாம் எனவும் அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்