ரெயில் நிலையம் அருகே போதை பொருட்களை வீசிச்சென்ற மர்ம நபர்கள்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே போதை பொருட்களை வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-05 17:22 GMT

ஜோலார்பேட்டை ரெயில்வே தனிப்படை போலீசார் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தினமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மர்ம நபர்கள் கடத்தி வரும் கஞ்சா, பான் மசாலா மற்றும் குட்கா போன்றவற்றை ரெயிலில் கடத்தி வருவதும், அவற்றை ரெயில்வே தனிப்படை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல ஜோலார்பேட்டை ரெயில்வே தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மர்ம நபர்கள் ரெயிலில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்துள்ளனர். அவர்கள் தனிப்படை போலீசாரை பார்த்ததும் போலீசாருக்கு பயந்து சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை ரெயில் நிலையத்திற்கு அருகில் வீசிச்சென்றுள்ளனர்.

அவற்றை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கைப்பற்றி, போதைப்பொருட்களை வீசிச்சென்றது யார் என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்