கோவிலில் புகுந்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்

வாணியம்பாடியில் கோவிலில் புகுந்து உண்டியலை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர்.

Update: 2022-12-02 18:25 GMT

வாணியம்பாடி கச்சேரி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலை ஓரத்தில் திருப்பதி கங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் அதன் மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக ஆட்கள் வருவதை கண்டதும் கலசத்தை ரோட்டில் வீசிவிட்டு தப்பிச்சென்று உள்ளனர்.

இது குறித்து கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்