குடிநீர் தொட்டி, பைப் லைனை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் தொட்டி, பைப் லைனை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் மதிப்பீட்டில் முள்வேலி அமைத்து முருங்கை நர்சரி அமைக்க சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் யாரோ சின்டெக்ஸ் தொட்டியை உடைத்து, குடிநீர் பைப்பையும் சேதப்படுத்தி உள்ளனர்.
சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் இணைப்பு பைப் லைனை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.