புதுப்பேட்டை அருகே மிளகாய் செடிகளை பிடுங்கிச்சென்ற மர்மநபர்கள் பெண் விவசாயி கதறல்

புதுப்பேட்டை அருகே மிளகாய் செடிகளை மர்மநபர்கள் பிடுங்கிச்சென்றதால் பெண் விவசாயி கதறி அழுதார்.

Update: 2022-11-01 18:45 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அடுத்த ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி கங்காதேவி (வயது 50). ராமலிங்கம் கடந்த 2009-ம் ஆண்டு கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது பனைமரம் விழுந்து இறந்துவிட்டார். கணவரை இழந்த கங்காதேவி, வறுமையின் காரணமாக ஒறையூர் மலட்டாறு ஓரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 50 சென்ட் நிலத்தை சீர்செய்து பயிர் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கங்காதேவி தனக்கு சொந்தமான நகையை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் செலவில் மிளகாய் நாற்றுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தில் நட்டு பராமரித்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை கங்காதேவி வழக்கம் போல் நிலத்திற்கு வந்து பார்த்தபோது, மிளகாய் செடிகளை காணவில்லை. அதனை நள்ளிரவில் மர்மநபர்கள் யாரோ? பிடுங்கிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதேவி நகையை அடகு வைத்து நட்ட மிளகாய் செடிகளை மர்மநபர்கள் பிடுங்கிச் சென்று விட்டார்களே என்று கதறி அழுத சம்பவம் பாிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்