வாழைகளை வெட்டிச் சாய்த்த மர்ம நபர்கள்

விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளத்தில் வாழைகளை மர்மநபர்கள் வெட்டிச் சாய்த்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாராங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சுமார் ஒரு ஏக்கர் விளைநிலத்தில் வாழை பயிர் செய்துள்ளார். தற்போது அவைகள் குலை தள்ளிய நிலைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இவரது வயலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி சாய்த்துள்ளனர். மேலும் அருகே உள்ள தோட்டத்தில் சுமார் 50 வாழைகளையும் சாய்த்தனர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்