தீபமலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்
தீபமலையில் தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தீபமலையில் தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் தீபமலை தீபமலை உள்ளது. 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில்தான் சிறப்பு வாய்ந்த கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த மலையில் பல்வேறு வகையான மூலிகை செடிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை, மலையில் உள்ள செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மலையில் தீ எரியும் பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் செடிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.