மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடும் மர்மநபர்கள்
ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடும் மர்மநபர்கள் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
ராமநத்தம்:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் காட்சிகள் வீட்டு முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. மேகராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.