குமரி கொத்தனார் மர்ம சாவு

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற குமரி கொத்தனார் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2022-05-29 17:22 GMT

குலசேகரம்:

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற குமரி கொத்தனார் மர்மமான முறையில் இறந்தார்.

குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பம்பச்சைக்கரைக் காட்டைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது52), கொத்தனார். இவருக்கு தங்கலீலா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தேவதாஸ் சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த மாதம் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி தங்கலீலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட தங்கலீலாவும், குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தநிலையில் தேவதாசின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி தங்கலீலா சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், குமரி மாவட்ட கலெக்டருக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளார். அந்த மனுவில், தேவதாசின் மரணத்தில் மர்மம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தேவதாஸ் மரணமடைந்து ஒரு மாத காலமாகியும் இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்