நல்லம்பள்ளி அருகே ஓட்டல் மாடியில் தூங்கிய வாலிபர் மர்ம சாவு

நல்லம்பள்ளி அருகே ஓட்டல் மாடியில் தூங்கிய வாலிபர் மர்மமாக இறந்தார்.

Update: 2022-06-12 16:47 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (25). இவர் குறிஞ்சி நகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின்னர் ஓட்டல் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்து வராததால் ஓட்டல் ஊழியர்கள் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தமும் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேல் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்