மாயமான செங்கல்சூளை உரிமையாளர் ஆற்றில் பிணமாக மீட்பு

புதுக்கடை அருகே மாயமான செங்கல் சூளை உரிமையாளர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-16 18:45 GMT

களியக்காவிளை:

புதுக்கடை அருகே மாயமான செங்கல் சூளை உரிமையாளர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆற்றில் ஆண் பிணம்

களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு மடத்துவிளை பகுதியில் குழித்துறை தாமிரபரணி ஆறு பாய்கிறது. நேற்று முன்தினம் அந்த பகுதிைய சேர்ந்த சிலர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும், களியக்காவிளை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், பிணமாக மிதந்தவர் குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தினர்.

செங்கல்சூளை உரிமையாளர்

விசாரணையில் புதுக்கடை அருகே மாராயபுரம் அக்கரைவிளை வீட்டை சேர்ந்த டேவிட்(வயது 45) என்பதும், ஒச்சவிளை பகுதியில் செங்கல்சூளை நடத்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மதுகுடிக்கும் பழக்கம் உள்ள டேவிட் அடிக்கடி வீட்டில் யாரிடம் சொல்லாமல் வெளியே சென்று விட்டு திரும்பது வழக்கம். அதன்படி கடந்த 13-ந்தேதி வெளியே சென்றவர் மாயமானார். இதுபற்றி அவரது மனைவி அஜிதா குமாரி(41)புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து போலீசார் டேவிட்டின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்