என் மண் என் மக்கள் நடைபயணம்: பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய பா.ஜனதா நிர்வாகிகள்

என் மண் என் மக்கள்' நடைபயணம்: குறித்து பொதுமக்களுக்கு பா.ஜனதா நிர்வாகிகள் துண்டுபிரசுரம் வழங்கினா்

Update: 2023-10-22 21:27 GMT

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பெருந்துறை தொகுதியில் குன்னத்தூர் ரோட்டில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை தொடங்கி அண்ணாசாலையில் முடிக்கிறார். அதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதையொட்டி மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் ஆலோசனைப்படி, மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க பெருந்துறை மற்றும் ஊத்துக்குளி ஒன்றிய பா.ஜனதாவினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் கலந்து கொள்ளுமாறு பெருந்துறை பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பா.ஜனதா. நிர்வாகிகள் நேரில் சென்று துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்தனர். இதில் ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராயல் கே.சரவணன், துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் கோபால், பெருந்துறை நகர தலைவர் எஸ்.பூர்ணசந்திரன், பொதுச்செயலாளர் கார்த்தி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கே.டி.எஸ்.கவின், செயலாளர் கவுரிசங்கர், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் கவின்குமார், ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் முருகானந்தம், மகளிர் அணி துணைத்தலைவர் சுகன்யா, பெருந்துறை நகர இளைஞர் அணி தலைவர் கமல், இளைஞர் அணி பொதுச்செயலாளர் விக்னேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்