முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-08-29 12:58 GMT

உடன்குடி:

பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், காலை10 மணிக்கு மகா சுதர்சன ஹோமம். லட்சுமி ஹேமம், நவகிரக ஹோமம், மாலை 4 மணிக்கு ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், கடல் ஸ்தாபனம், மற்றும் முதலாம் கால யாகசால பூஜை, இரவு அஷ்ட பந்தன மருந்துகள் சாத்துதல் நடைபெற்றது. 2-ம் நாள் காலையில் யாகசாலை பூஜை தொடந்து சுமங்கலி பூஜை நடந்தது. 3-ம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், அபிஷேகம், அலங்கார பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்