முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-08-20 19:00 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள இடையர்காடு முத்தாரம்மன் கோவில் சப்பரத்தில் முத்தாரம்மன் உற்சவர் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டு அதற்கு கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கன்னியா பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. தொடர்ந்து சப்பரத்தில் செய்யப்பட்டுள்ள முத்தாரம்மன் உற்சவர் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்