முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவனுக்கு பதக்கம்
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவனுக்கு பதக்கம் கிடைத்தது.
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் இளங்கலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரியதர்ஷன். இவர் 10-வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பிலும், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குனரக கொடி பகுதியில் வரையப்பட்ட வரைபடத்தை விளக்கி அதிகாரிகளிடம் கூறும்போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றார். மேலும் லைன்ஏரியா, பைலட்டிங் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பதக்கங்கள் வென்றார்.
இதன் மூலம் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரிக்கும், 10-வது பட்டாலியன் என்.சி.சி.க்கும் பெருமை சேர்த்த மாணவன் பிரியதர்ஷனை கல்லூரி முதல்வர் மலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பத்மினி, தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் பரசுராமன், அனைத்துத்துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.