முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலத்தில் நின்று செல்லும்- பல்வேறு ரெயில்களின் நிறுத்தங்களும் அறிவிப்பு

ரத்து செய்யப்பட்டு இருந்த சில நிறுத்தங்களில் ரெயில்கள் நின்று செல்வது குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருமங்கலத்தில் இனி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்.

Update: 2023-07-13 21:25 GMT


ரத்து செய்யப்பட்டு இருந்த சில நிறுத்தங்களில் ரெயில்கள் நின்று செல்வது குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருமங்கலத்தில் இனி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்.

திருமங்கலம்-மண்டபம்

தென்மாவட்டங்களில் உள்ள சில ரெயில் நிறுத்தங்கள் கொரோனா காலத்துக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் வற்புறுத்தலை தொடர்ந்து அந்த நிறுத்தங்களில் மீண்டும் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நிறுத்தங்களில் ரெயில்கள் நின்று செல்வது பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த நிறுத்தங்கள் தற்காலிகமானது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாலக்காடு-நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16792) கீழக்கடையம், குந்தரா ரெயில் நிலையங்களில் வருகிற 18-ந் தேதி முதல் நின்று செல்லும். சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12637) மணப்பாறை ரெயில் நிலையத்திலும், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.22661) மண்டபம் ரெயில் நிலையத்திலும், நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (வ.எண்.16791) வருகிற 19-ந் தேதி முதல் பாவூர்சத்திரம், குந்தரா ரெயில் நிலையங்களிலும், ராமேசுவரம்-பனாரஸ் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வ.எண்.22535) ராமநாதபுரத்திலும், சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.12631) சோழவந்தான் ரெயில் நிலையத்திலும், கோவை-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வ.எண்.16618) சிவகங்கையிலும், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.12693) திருமங்கலம் ரெயில் நிலையத்திலும், சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16101/16102) இரு மார்க்கங்களிலும் ஆரியங்காவிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

இதே போல் வருகிற 18-ந் தேதி முதல் தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.12694) அரியலூரிலும், ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16752) சீர்காழி மற்றும் கடலூர் துறைமுகத்திலும், ராமேசுவரம்-திருப்பதி வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16780) வருகிற 20-ந் தேதி முதல் சீர்காழி மற்றும் திருப்பாதிரி புலியூர் ரெயில் நிலையங்களிலும், கன்னியாகுமரி-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16862) வருகிற24-ந் தேதி முதல் சீர்காழி மற்றும் திருப்பாதிரிபுலியூரிலும் நின்று செல்லும்.

தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16235) வருகிற 19-ந் தேதி முதல் கொடுமுடி ரெயில் நிலையத்திலும், சென்னை சென்டிரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22651) வருகிற 18-ந் தேதி முதல் மொரப்பூர் ரெயில் நிலையத்திலும், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16339) நாமக்கல் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்