முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சு.பில்ராம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 24 ந் தேதி நடக்கிறது

Update: 2022-06-20 16:24 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே சு.பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. மாலையில் மங்கள இசை, கலசபூஜை மற்றும் யாகவேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.

பின்னர் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மகா பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் வேள்வி பூஜை, கலச பூஜையும், 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு மேல் முத்துமாரி அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்