முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-17 19:45 GMT

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முத்துமாரியம்மனுக்கு காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து முத்துமாரியம்மனை வழிபட்டனர். மாவிளக்கு வைத்தும், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆர்.பாலக்குறிச்சி, வெடத்தலாம்பட்டி, சீகம்பட்டி, வைரவன்பட்டி, ரெகுநாதபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்