முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

மயிலாடுதுறை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது

Update: 2022-06-10 17:18 GMT


மயிலாடுதுறை

மயிலாடுதுறை,திருவிழந்தூர், அப்பங்குளத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 1-ந் தேதி காட்டு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கஞ்சி வார்த்தலும், தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. கடந்த 7, 8, 9-ந் தேதிகளில் காத்தவராயன் கதை நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று பால்குடம் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது. இதனையொட்டி, காலை 6 மணிக்கு காத்தவராயன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள்

இதனைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பகல் 1 மணிக்கு கஞ்சி வார்த்தல், மாலை 3 மணிக்கு காவிரி கரையிலிருந்து கரகம், காவடி, வாய்ப்பூட்டு போன்ற விதவிதமான காவடிகளை பக்தர்கள் சுமந்து வந்தனர். அதன்பிறகு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்