முத்துமாரியம்மன், கற்பகநாதர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

முத்துமாரியம்மன், கற்பகநாதர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-12 18:08 GMT

ஆரணி

முத்துமாரியம்மன், கற்பகநாதர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி - சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராட்டினமங்கலம் சாலையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் - கற்பகநாதர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 25-ந் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றது.

இதன் நிறைவு விழா, நாயன்மார்கள் வரலாறு சொற்பொழிவு நிறைவு விழா, முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. கோவை, போரூர் மாணிக்கவாசகர் அருட்பணி மன்றத்தின் குமரலிங்கனார் குழுவினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர். பின்னர் புனித நீரினால் சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஜோதிடர் ரா.குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வேள்வி பூஜை நடத்திய குமரலிங்கனார் மற்றும் ஸ்தபதி, தொடர் சொற்பொழிவு ஆற்றியவர்கள், விழாக் குழுவினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர். இதனையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்து மாரியம்மன் - கற்பகநாதர் அறக்கட்டளை திருப்பணி குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்