முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பவுஞ்சிப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டில் புதிதாக கட்டப்பட்ட மகா முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகாவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் முதற்கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சூரிய பூஜை, வேதிக்கார்ச்சனை, 2-வது கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி, காலை 10 மணி அளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.