முத்து மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா

மணக்குடி முத்து மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடந்தது.

Update: 2023-04-28 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த மணக்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. .பின்னர் முத்துமாரியம்மன் கோவிலின் குளத்தில் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்