துர்க்கை திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினத்தில் துர்க்கை திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.

Update: 2022-09-27 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவில் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் ராகு தோஷம் நீங்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்