முத்தாரம்மன் கோவில் கொடை விழா
சாத்தான்குளம் அருகே முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் முத்தாரம்மன், உலகளந்த பெருமாள் சுவாமி மற்றும் சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா 5 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி அன்னதானம், சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேகம், தீபாராதனை, முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் பெட்டி ஊர்வலம், 508 திருவிளக்கு பூஜை, வில்லிசை, முத்தாரம்மன், உலகளந்த பெருமாள் சுவாமி, சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.