திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முத்தமிழ் விழா

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.

Update: 2023-07-26 10:03 GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் அரவிந்த் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மருத்துவ நிலைய அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் மன்ற ஆலோசகர்கள் பெருமாள்பிள்ளை, மற்றும் அனுஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிறப்பு விருந்தினராக டி.வி.நடிகர் மதுரை முத்து கலந்து கொண்டு, 'இக்கால கலாசார மாற்றங்கள் நன்மைக்கா?, தீமைக்கா?' என்ற தலைப்பில் நடுவராக இருந்து பட்டிமன்றம் நடத்தினார்.

மேலும் விழாவில் யாழ்-2023 என்ற இதழ் வெளியிடப்பட்டது. மேலும் பொங்கல் போட்டி, கோலப்போட்டி கபடி உள்ளிட்ட போட்டிகளும், மயிலாட்டம் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

முடிவில் மாணவர்கள் ஜிஷ்னு, நவீனா நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்