முத்தமிழ் மன்ற விழா

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா நடந்தது.

Update: 2023-05-10 19:00 GMT

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் 'பேரிகை-23' என்ற தலைப்பில் முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது. இதற்கு மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் எழிலரசன், மருத்துவக் கண்காணிப்பாளர் இளங்கோவன், குழந்தைகள் நல தலைமை பேராசிரியர் செல்வக்குமார், டாக்டர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து கலந்துெகாண்டனர்.

விழாவையொட்டி மாணவிகள் முளைப்பாரி எடுத்து மேள, தாளங்களுடன் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். விழாவில் மருத்துவக்கல்வி இயக்குனர் தலைமையில் 'மாணவர்களின் இன்றைய வாழ்க்கை கொண்டாட்டமா? அல்லது திண்டாட்டமா?' என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம், சிலம்பாட்டம் மற்றும் தொன்மையான நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்பு மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்