பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்
நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக இந்துமதி பாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இதுவரை பதவி பிரமாணம் ஏற்கவில்லை. அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி சமூகநீதிக்கு எதிரான கூட்டுக்குழுவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாசம் தலைமையில், முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், மண்டல செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது ஓரிரு நாட்களில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.