"முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள்"- அர்ஜூன் சம்பத் பேட்டி

“இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள்” என்று நெல்லையில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2023-08-06 19:33 GMT

"இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள்" என்று நெல்லையில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

சாமி தரிசனம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று காலையில் நெல்லை வந்தார். நெல்லையப்பர் கோவிலில் செங்கோலை வைத்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக வெற்றிப்பெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்தோம். எங்கள் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேறும். நாடு சுதந்திரம் அடைந்தபோது அப்போதைய பிரதமர் நேருவிடம் செங்கோலை ஆதீனங்கள் ஒப்படைத்தனர். அந்த செங்கோல் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அந்த செங்கோலை மோடி வைத்து உள்ளார். இது நமக்கு கிடைத்த பெருமை.

பாரத தாயின் பிள்ளைகள்

இந்தியாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சாத்தானின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் பாரத தாயின் பிள்ளைகள். நாட்டில் யாருக்கும் பாகுபாடு இல்லை. அனைவரும் ஒன்று தான். அதற்காக தான் பொதுசிவில் சட்டம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்துப்பாண்டி, நெல்லை பகுதி செயலாளர் சுடலைமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

எழுச்சி பொதுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்