முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-30 13:58 GMT

திருப்பூர்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து அதன் சமுக வலைத்தள பக்கம் முடக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்புக்கு தடை விதித்ததை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் நேற்று மாலை முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சில கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டதை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய கோரியும் மத்திய அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்