காளான் வளர்ப்பு பயிற்சி
கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு அட்மா திட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திட்ட மேலாளர் அரவிந்தன் வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, அண்ணாமலை பல்கலைக்கழக தோட்டக்கலை துறை பேராசிரியர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகம், விற்பனை, சந்தைப்படுத்துதல் குறித்து கூறினார்.
காளான் வளர்ப்பு முன்னோடி விவசாயி வினோத்குமார் கலந்து கொண்டு காளான் வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார். அட்மா திட்ட உதவி மேலாளர்கள் பார்த்திபன், சந்தோஷ்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி உதயசூரியன் நன்றி கூறினார்.