காளான் வளர்ப்பு பயிற்சி
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் கட்டண பயிற்சியாக காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நடக்கிறது. கட்டண பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவியல் நிலையத்தில் இருக்க வேண்டும். மேலும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பட உள்ளது. ஒரு நாள் கட்டண பயிற்சிக்கு ரூ.590-ஐ செலுத்த வேண்டும். இந்த அரிய வாய்ப்பை சுயதொழில் தொடங்கி தொழில் முனைவராக விரும்பும் இளைஞர்கள், விவசாயிகள், சுய உதவி குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.