முருகன் கோவில் தேரோட்டம்

கோடியக்காடு முருகன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-06-02 18:45 GMT

வேதாரண்யம்:

கோடியக்காடு முருகன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வைகாசி விசாக விழா

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த குழவர்(முருகன்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார்.

இதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என பக்தி கோஷங்கள் முழுங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நேர்த்திக்கடன்

தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்