முக்காணியில் வாலிபருக்கு கொலைமிரட்டல்

முக்காணியில் வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-29 14:27 GMT

ஆறுமுகநேரி:

முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த செல்லையா மகன் வேல்முருகன். தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் முக்காணி பஜாரிலுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த ஓட்டலில் புரோட்டா வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சின்னத்தம்பி (வயது 18) வந்துள்ளார். ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வேல்முருகன் எழுந்து சென்று, தான் சாப்பிட்ட உணவை சின்னத்தம்பி வாயில் ஊட்டிவிட முயற்சித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால், சின்னத்தம்பியை குத்த முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் தடுத்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடங்காத அவர் சின்னத்தம்பிக்கு கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்