துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் வாலிபர் படுகொலை

Update: 2023-05-30 13:19 GMT

வாணாபுரம்

திருவண்ணாமலை அருகே கந்துவட்டி தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டு காயங்களுடன் பிணம்

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருேக

மணலூர்பேட்டை- திருவண்ணாமலை சாலை பா.வு.ச.நகர் அங்கன்வாடி மையம் அருகே வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயத்துடன் உயிரிழந்து கிடப்பதாக தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தேவனூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரின் மகன் அருள்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது.

கந்து வட்டி தகராறு

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மாமலைவாசன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அருள்குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடி ஆத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாமலைவாசன் என்பவருக்கும் கந்து வட்டி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக அருள்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மாமலைவாசன் அதற்காக 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் சென்று அருள்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டு வெட்டி கொலை

இந்த நிலையில் நேற்று  இரவு அருண்குமார் மணலூர்பேட்டை பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இதனையறிந்த மாமலைவாசன் மற்றும் அவரது நண்பர்களான தேவனூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (37), கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிதிருவரங்கம் பகுதி சேர்ந்த சூர்யா (22) ஆகிய 3 பேரும் அருள்குமரை மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர்.

அப்போது அருள்குமார் மணலூர்பேட்டை பகுதியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாமலைவாசன் பின்னால் வேகமாக துரத்தி அருள்குமாரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருள்குமாரை இளங்கோவன், சூர்யா, மாமலைவாசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சராசரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதனையடுத்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்திகளை அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஏரிகளில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொலை நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தார்.

மேலும் அவர் எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தினார்? என்று விசாரணை மேற்கொண்டார்.

சினிமா படப்பாணியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்