உவரி அருகே வாலிபர் கொலை: தலைமறைவாக இருந்த தம்பதி கைது

உவரி அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-14 19:17 GMT

திசையன்விளை:

உவரி அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனையைச் சேர்ந்தவர் சுடலைமாடன். இவருடைய மகன் சுபாஷ் என்ற மணி (வயது 26). மீன்பிடி தொழிலாளி.

இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த டெல்வர் மகன் மீனவர் ராஜாவுக்கும் (32) இடையே முன்விரோதம் இருந்தது. இதனால் சுபாஷை கொலை செய்ய திட்டம் தீட்டிய ராஜா, அவருடன் நட்பு வளர்த்து கொண்டு மதுவிருந்துக்கு தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இரவில் ராஜாவின் வீட்டுக்கு சென்று மது அருந்திய சுபாஷை, ராஜா உள்ளிட்டவர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை காட்டுப்பகுதியில் வீசிச் சென்றனர்.

தம்பதி கைது

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ராஜாவின் சகோதரர்களான தீபன்சிங், பிரவீன் ஆகிய 2 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். தலைமறைவான ராஜா, அவருடைய மனைவி ஜோஸ்பின் சூசை வெஸ்பினா ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடினர். இந்த நிலையில் திருப்பூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்த ராஜா, ஜோஸ்பின் சூசை வெஸ்பினா ஆகிய 2 பேரையும் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, ஏட்டுகள் ரத்தினவேல், ரெனால்டு ஆகியோர் மாறுவேடத்தில் சென்று கைது செய்து அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்