காரைக்குடியில் பயங்கரம்: வீடு புகுந்து வாலிபர் கொலை

காரைக்குடியில் வீடு புகுந்து வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடியில் வீடு புகுந்து வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்

காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா. இவருடைய மகன் அலெக்ஸ் பாண்டியன். (வயது 28) இவர் போர்வெல் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 7 மணி அளவில் திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டது.

அப்போது, சமையல் அறையில் இருந்த தாயார் இந்திரா பதறியபடி ஓடிவந்து பார்த்தார். அப்போது, ஒருவன் கையில் கத்தியோடு வெளியே ஓடுவது தெரிந்தது.

தலை, கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்களோடு ரத்த வெள்ளத்தில் அலெக்ஸ்பாண்டியன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். மகனின் நிைலயை பார்த்து இந்திரா அலறினார்.

சாவு

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அலெக்ஸ் பாண்டியன் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயங்கள் சேகரிப்பு

போலீ்ஸ் மோப்ப நாய், கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி ஆர்ச் அருகே நின்றது. சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு ேகாணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினும், சம்பவ இடத்தை பார்வையிட்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்