பல்லடம்
திருப்பூர் தட்டான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). இவர் கடந்த 12-ந் தேதி பல்லடம்-தாராபுரம் சாலையில் ஒரு புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடும்பத்தகராறில் ஆறுமுகத்தை அவருடைய சித்தப்பா மகன்களான பாலமுருகன் (40), முத்துவேல் (37) ஆகியோர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்து உடலை புதரில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலமுருகன், முத்துவேலை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்ரண்டு சசாங் சாய் பாராட்டினார்.