ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து முகத்தை சிதைத்து வீசிய கும்பல்

ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து முகத்தை சிதைத்து வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2022-10-10 18:30 GMT

தொண்டி, 

ரவுடியின் தலையை துண்டித்து எடுத்து முகத்தை சிதைத்து வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

குற்ற வழக்குளில் தொடர்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரம் அருகே அத்தாணி வயல் கண்மாய் கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்ற முத்துப்பாண்டி (வயது 38). இவர் கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்.

தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி சிறைக்கு சென்று, பின்னர் ஜாமீனில் வந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார். இந்தநிலையில் திருவாடானையில் இருந்து செங்கமடை கிராமத்திற்கு செல்லும் வயல்காட்டு பாதையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ெகாடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகம் சிதைப்பு

இதுபற்றிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முத்துப்பாண்டியின் தலை எங்கே? என்று தேடினார்கள். அங்கிருந்து சிறிது தூரத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தலை தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

பின்னர் தலை மற்றும் உடலை பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகே கிடந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.

2 கி.மீ. ஓடிய நாய்

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டதில் சம்பவ இடத்தில் இருந்து தொண்டி ரோட்டில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குமேல் ஓடியது. திருவெற்றியூர் விலக்கு சாலையில் உள்ள ஆர்ச் அருகே நின்றுகொண்டது.

போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

முத்துப்பாண்டி ரவுடியாக வலம் வந்ததால், முன்விரோதத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொைலயில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்