மாமியார் குத்திக்கொலை
மேலூர் அருகே மாமியாைர கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்,
மேலூர் அருகே மாமியாைர கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிக்கடி தகராறு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள கொன்னைப்பட்டியை சேர்ந்த தம்பதி சேவுகன்-செல்வமணி. இவர்களின் மகள் பானுமதி (வயது 30). இவரது கணவர் கண்டுகப்பட்டியை சேர்ந்த செல்வம் (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வம் துபாயில் வேலைபார்த்து விட்டு சமீபத்தில் ஊர் திரும்பி வந்தநிலையில் குடிபோதையில் மனைவி பானுமதியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபித்துக்கொண்டு பானுமதி கொன்னைப்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு மகன்களுடன் சென்று விட்டார். இந்தநிலையில் கொன்னைப்பட்டிக்கு வந்த செல்வம், அவரது மனைவி பானுமதி மற்றும் பானுமதியின் தாய் செல்வமணி (50) ஆகிய 2 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
வழக்குப்பதிவு
படுகாயம் அடைந்த 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பானுமதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.