வாழப்பாடி அருகே மண்வெட்டியால் தாக்கி முதியவர் கொலை-டிரைவர் கைது

வாழப்பாடி அருகே மண்வெட்டியால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-17 22:51 GMT

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே மண்வெட்டியால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

முதியவர் மீது தாக்குதல்

வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் மாரிமுத்து (60). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ரமேஷ் (37) என்பவருக்கும் குறிச்சி ராஜவீதி பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரமேஷ், மாரிமுத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாரிமுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரமேசை கைது செய்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். உடனே போலீசார் மாரிமுத்து இறந்ததை கொலை வழக்காக பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்