தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது

தளி அருகே தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-03 20:10 GMT

தளி அருகே தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடல்நிலை பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா அத்திக்கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் தற்போது தனது தங்கை தமிழ்ச்செல்வி (வயது 42) என்பவருடன் குறிச்சி கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வி வலிப்பு நோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனநலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இவர் இயற்கை உபாதையை வீட்டுக்குள்ளேயே கழித்து வந்துள்ளார். சக்திவேல் அவரை திருத்துவதற்கு முயற்சித்து வந்துள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வி மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வந்துள்ளார்.

தங்கை அடித்து கொலை

இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு தமிழ்ச்செல்வி வீட்டுக்குள் இயற்கை உபாதை கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன் சக்திவேல் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சகோதரி என்றும் பாராமல் தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் அவர் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் விரைந்து சென்று தமிழ்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணன் கைது

அதை தொடர்ந்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். உடன் பிறந்த அண்ணனே தங்கையை அடித்துக்கொன்ற சம்பவம் குறிச்சி கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்